மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாது பொலிசைக் கொண்டு தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாகம்.இன்றையதினம் உலகமே மாவீரர்தினத்தினை அனுஸ்டித்துக்கொண்டிருக்கின்றவேளையில் தமிழனே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாது பொலிசைக் கொண்டு தடுத்து நிறுத்திய சம்பவம் ஈழத்தில் நடந்துள்ளது.


வீரத்திற்கு பெயர்போன மட்டு மண்ணில் சில கோளைகள் இந்த நிலையை தோற்றுவித்துள்ளனர்.

கல்லடி பிரதான வீதியில் புலிகளால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் ஒன்று உள்ளதை யாவரும் அறிவீர்கள். கடந்த வருடமும் அந்த நினைவாலையத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வருடமும் அஞ்சலி செலுத்துவதற்காக அப்பிரதேச இளைஞர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது கல்லடி சித்திவிநாயகர் ஆலய பொருளாளர் அதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அக்காணி ஆலயத்திற்கு சொந்தமானது என்று இளைஞர்களை மிரட்டியுள்ளார். பின்னர் பொலிசாரைக் கூட்டிவந்துள்ளார். அவ்விடத்திற்கு வந்த பொலிசாரும் புலனாய்வாரள்களும் அங்கு நின்ற இளைஞர்களைக் கைது செய்ய முற்பட்டிருக்கின்றனர்.

இவ் ஆலயத்தின் தலைவர் மட்டு மாநகர மேஜர் சரவணபவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேஜர் சரவணபவன் இதுதான் உங்கள் வீரமா? மாவீரர்களுக்கு உங்கள் மண்ணில் இடமில்லையா?


இந்த வருடம் அமைதியாக அனுஸ்டிக்கமுடியும் என ஜனாதிபதியே அறிவித்திருந்தார்.Powered by Blogger.