தமிழரசுக் கட்சியின் வலது கை பிள்ளையானுடன் இணைவு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று பிள்ளையானின் கட்சியில் இணைந்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாகரை பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உப செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் இன்று பிள்ளையானின் கட்சியில் இணைந்துள்ளார்

இன்று காலை பிள்ளையானை சிறைக்குச் சென்று சந்தித்த பாலசிங்கம் முரளிதரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இணைந்துகொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது, நாம் பிரதேசசபையை கைப்பற்றி எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் செய்ய முடியாதுள்ளோம். 

கிழக்கிலே முஸ்லிம்களால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வாகரையில் பல ஏக்கர் காணிகள் முஸ்லிம்களின் வசமாகியுள்ளது. கூட்டமைப்பினர் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கின்றனர். கிழக்கு மண்ணையும் எமது மக்களையும் காப்பாற்ற வேண்டும்.


கிழக்கினை காப்பாற்ற பிள்ளையானே சரியான தெரிவு என்பதை உணர்ந்துள்ளேன். கிழக்கு தமிழ் மக்கள் போட்டபாஜ ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்து கிழக்கை காப்பாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாளைய தினம் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் பிள்ளையானின் கட்சியில் இணையவுள்ளதாகவும் அறிய முடிகிறதுPowered by Blogger.