அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சஜித் எத்துள்ள அதிரடி முடிவுசஜித் பிரேமதாச நளை பொதுமக்களை சந்திக்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பானது நாளைய தினம் காலை 11.00 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது.


இந்த சந்திப்பின்போது சஜித் பிரேமதாச தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் பல நெருக்கடிகளுக்கு சஜித் உள்ளிட்ட மொத்த ஐ.தே.கட்சி குடும்பமும் முகம் கொடுத்து வருகின்றது.


அமைச்சர்களின் அடுத்தடுத்த இராஜினாமாக்களுக்குப் பின் இன்று ரணில் பதவி விலக இருப்பதாக அறியமுடிகின்றது.


இந்த நிலையில் ஐ.தே.கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்த சஜித் நாளை மக்களை சந்திப்பதாக எடுத்த முடிவு அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Powered by Blogger.