மகிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த தாமதம் ஏற்பட்டமை இந்த தீர்மானித்திற்கு காரணம் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். தற்போதைய ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையவுள்ளது. அதுவரை மகிந்த தேசப்பிரிய ஆணைக்குழுவின் தலைவராக பதவி வகிக்க முடியும்.
ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டால், அது அரசியலமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படுவதே சம்பிரதாயம். இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்த பின்னர் அரசியலமைப்பு பேரவையினால் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படும்.