வட மாகாண ஆளுநராக முரளிதரனை நியமிக்க நடவடிக்கை


வட மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள முன்னர் முரளிதரனுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து முத்தையா முரளிதரனுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண ஆளுநராக முரளிதனை நியமிக்குமாறு இந்திய அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய விஜயத்திற்கு முன்னர் முரளிதரனுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Powered by Blogger.