தற்கொலைக் குண்டுதாரியுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான பணியாளர்கள் கைது
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான பணியாளர்களாக கடமையாற்றும் மூன்று பேர் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விமான சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றும் மேலும் நான்கு பேர் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.