விசா இன்றி கனடாவிற்கு செல்லலாம் என்று போலியான செய்தி வெளியாகியுள்ளது!விசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்லலாம் என தெரிவித்து இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.


இந்த விடயம் தொடர்பில் அந்த இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


மேலும், வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இந்த செய்தி முற்றிலும் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், குறித்த இணையத்தளம் அவ்வப்போது கனடா பிரதமர் குறித்தும் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், விசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்லலாம் என அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Powered by Blogger.