கொம்பனித்தெரு பள்ளிவாசலில் மீட்கப்பட்ட வாள்களை இறக்குமதி செய்தவர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்


கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று கைப்பற்றப்பட்ட வாள்கள் இறக்குமதி செய்தவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜூடீன் என்பவர் என தெரியவந்துள்ளது.இந்த நபர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர் எனவும் சீனாவில் இருந்து இந்த வாள்களை அவர் இறக்குமதி செய்திருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதற்கான பணத்தை மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இப்ராஹிம் மௌலவி என்பவரின் மகன் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


விசேட அதிரடிப்படையினர் நேற்று கொம்பனித்தெருவில் உள்ள பள்ளிவாசலில் நடத்திய தேடுதலில் 46 வாள்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபருக்கு சீனாவில் இருந்து 300 வாள்களை இறக்குமதி செய்ய பணம் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.Powered by Blogger.