கருணா, வியாழேந்திரனுடன் மஹிந்தவின் கூட்டும் சதியும்


நாம் நாட்டை பிரிக்கும் பிரிவினைவாதிகள் தாம் என மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.கருணா, கேபி, வியாழேந்திரன் போன்றோரை மஹிந்த ராஜபக்ச அருகில் வைத்திருந்தாலும், நாட்டை பிரிக்கும் கதையை கூறாமல் அவர்களை தேச பற்றுடையவர்கள் என கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் தாம் அவ்வாறான எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த போதிலும், தான் ஒரு தேச துரோகி எனவும், விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் ராஜபக்ச தரப்பினரால் நாடு பூராகவும் போலியான பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த யுகத்தின் புத்தகம் ஒன்றை எழுதிய சட்டத்தரணி மனோர டி சில்வா பொய்களை கூறியுள்ளார். அந்த புத்தகத்தில் கூறப்பட்டதனை போன்ற அரசியலமைப்பு அல்லது நாட்டை பிரிக்கும் நடவடிக்கை ஒன்று இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் 23 வருடங்களாக தங்கள் கட்சி நாட்டை பிரிப்பதாகவும், தங்கள் கட்சி விடுதலை புலிகளின் கட்சி என கூறி சேறு பூசப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்காமை தனது பலவீனம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Powered by Blogger.