பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால், வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுகாதார வசதி கட்டிட தொகுதி திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால், வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுகாதார வசதி கட்டிட தொகுதி 2026 மே 10ஆம் திகதி சிறப்பாக கையளிக்கப்பட்டது.

சுமார் ரூபா 70 இலட்சம் மதிப்பிலான இத்திட்டம் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் கழகத் தலைவர் லயன் எஸ்.மனோகரன் MJF/MAF அவர்களின் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் லயன் கே.லோகேந்திரன் PMJF/PMAF அவர்கள் மற்றும் முதல் பெண்மணி லயன் லோஜிதா லோகேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கௌரவ அதிதிகளாக,
லெப்டினன்ட் கேனல் ரோஹண விமலசேன, மேஜர் சேமசிங்க அலஹகூன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக விவேகானந்தா சிறுமிகள் இல்லத்தின் தலைவர் எஸ். சந்திரகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் நிகழ்வில், “இரண்டாம் துணை ஆளுநர் டாக்டர் ரீ.ஆதித்தன் PMJF/PMAF, லயன் பி.ஜி. டேவிட் MAF – செயலாளர் லயன் எம். விதுசாகன் MJF/MAF – பொருளாளர், லயன் பி. சடாட்சரராஜா MJF/PMAF – திட்டத் தலைவர் (மாவட்ட ஆளுநரின் பிரதம நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை அமைச்சரவை பொருளாளர்), லயன் என். தர்ஷன் PMAF – GMST ஒருங்கிணைப்பாளர்,
லயன் ஜி. முரளிதரன் MAF – GMCT ஒருங்கிணைப்பாளர்,
லயன் டி. சுபாஷ்கரன் MAF – மண்டலத் தலைவர் மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் வாழைச்சேனை மற்றும் ஆரையம்பதி லயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த மனிதாபிமானத் திட்டம், சமூக சேவையிலும் சமூக முன்னேற்றத்திலும், குறிப்பாக ஆதரவற்ற சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு பங்களித்த அனைத்து அனுசரணையாளர்கள், நல்வாழ்த்துர்கள் மற்றும் கழக உறுப்பினர்களுக்கும் கழகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது. 














Powered by Blogger.