கிலசன் பவித்ரா தம்பதிகள் இளஞ்சைவ பண்டிதர்களாக பட்டம் சூடினர்!!

மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த குலசிங்கம் கிலசன் மற்றும் அவரது துணைவியார் திருமதி பவித்ரா கிலசன் இருவரும் ஒரே மேடையில் இளஞ்சைவ பண்டிதர் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றும் குலசிங்கம் கிலசன் ஆன்மீக சொற்பொழிவாளராக கடந்த மூன்று வருடங்களாக கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்துடன் இணைந்து பயணிப்பதோடு கடந்த வருடம் ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதினை பெற்றிருந்ததோடு, கலைஞர் சுவதம் விருது மற்றும் தேசிய அறிவிப்பாளருக்கான விருது ஆகியவற்றுக்கு சொந்தக்காரராக சமூக சமயப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு சுயாதீன ஊடகவியலாளராகவும் பயணிக்கிறார். 

தென்கிழக்கு பல்கலைக்கழக கலைத்துறை  பட்டதாரியான அவரது துணைவி பவித்ரா அவர்களும் அறநெறிப் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றுவதுடன் சமய அனுட்டானங்களை பின்பற்றி சமயப் பற்றோடு தமிழையும் நேசிக்கிறார்.





Powered by Blogger.