அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - மதத்தின் பெயரால் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாமென வலியுறுத்தல்!
அநுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி கோரியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மட்டக்களப்பில் இன்று முன்னெடுத்தனர்.
இதில் பெண்கள், இளைஞர்கள் எனப் பலரும் பதாகைகளை ஏந்தியவாறு வீதியோரமாக நின்று தங்களது எதிர்ப்பை மௌனமாக வெளிப்படுத்தினர்.
மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம் பிக்குவினால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அநுராதபுர சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நாட்டில் நீதியான சட்ட அமலாக்கமும், அதிகார துஷ்பிரயோகமற்ற கலாசாரமும் உருவாக வேண்டும் என வலியுறுத்தினர்.
![]() |






