மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் தன்னலமற்ற கொடையாளர்களுக்கு உயரிய கெளரவம்!!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் தன்னலமற்ற கொடையாளர்களுக்கு உயரிய கெளரவம்!!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவரும் சிரேஸ்ட ஊடகரும் சமூக செயற்பாட்டாளருமான "தேசிய ஜோதி, சாமஶ்ரீ தேசமானிய, சமூக ஜோதி" உ.உதயகாந்த் தலைமையில் மட்டக்களப்பிலுள்ள தனியார் (Treatooo Hotel) விடுதியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் நடைபெற்ற குறித்த இரண்டாம் கட்ட விருது வழங்கும் நிகழ்வில் லண்டனில் தொழிலதிபர் ஆக இருந்து கொண்டு இலங்கை பூராகவும் இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி கல்வி, மருத்துவம், கலை, விளையாட்டு, கலாசாரம், வாழ்வாதாரம் போன்ற உதவிகள் என பலதரப்பட்ட உதவிகளை மனமுவந்து வழங்கி வரும் மார்க்கண்டு நேசராசா, மார்க்கண்டு லிங்கராசா எனும் இரு கொடையாளர்களும் பிரதம அதிதிகளாகவும் சிறப்பு அதிதிகளாக பிரபல தொழிலதிபர்களான கலாநிதி பொன்.நல்லரெத்தினம், மார்க்கண்டு பரணிரூபசிங்கம் ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது மாவட்டத்தி ற்கு மட்டுமல்லாது இலங்கை பூராகவும் அமரத்துவம் அடைந்த மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி ஆகியோரது நினைவாக லண்டனில் இருந்து கொண்டு தன்னலமற்ற சமூக சேவையினை ஆற்றிவரும் கோவில் போரதீவை சேர்ந்த தொழிலதிபர்களான மார்க்கண்டு நேசராசா மற்றும் மார்க்கண்டு லிங்கராசா ஆகிய இருவருக்கும் தேசிய ஜோதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர், உப தலைவர், செயலாளர் உள்ளிட்ட சங்கத்தின் மீயுயர் குழு உறுப்பினர்கள் மற்றம் பிரதான இணைப்பாளர்களினால் இவர்களது உயரிய சேவைகளை பாராட்டி வாழ்த்தியதுடன், மேலும் இதன் போது அபெக்சா டோனேசன் குழுமத்தினால் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்திற்கு ஒரு தொகுதி கலாசார ஆடைகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டதுடன் அதன் கிழக்கு மாகாண இணைப்பாளர் தேவகுமார் இதன் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















.jpg)




