மட்டக்களப்பு - பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் கைவிஷேடம் வழங்கும் நிகழ்வு

மலர்ந்திருக்கின்ற பராபவ சித்திரை புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி கைவிஷேட நாளான 15/04/2026 புதன்கிழமை இன்றைய தினம் ஆலய தலைவர் கி.கெங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெறுகின்றது.

ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ.ப.கண்ணன் குருக்கள் அவர்களினால் சைவபக்த மெய்யடியார்களுக்கு பெருமானின் புனித திருத்தலத்திலே பாரம்பரிய முறைப்படி கைவிஷேடம் வழங்கும் வைபவமானது சுப நேரம் காலை 9மணி 04 நிமிடத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. 

எனவே பக்த அடியவர்கள் அனைவரும் ஆலயம் வருகை தந்து கைவிஷேடம் பெற்றுச்செல்லலாம் என்பதனை ஆலய நிருவாக சபையினர் அன்பாக அறியத்தருகின்றனர்.







Powered by Blogger.