தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டி!!

(உ.உதயகாந்த்)

தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு நிகழ்வானது மட்டக்களப்பு நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதி நினைவு இல்லத்தில் அவரது சமாதியில் இடம் பெற்றது.

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் உறவினர்கள் மற்றும் தாயக செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் குறித்து நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜ சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் அன்னையின் குடும்ப உறவினர்கள், சர்வ மத தலைவர்கள், தமிழ் தேசிய பற்றாளர்கள், ஊடகவியலாரும் சமூக செயற்பாட்டாளருமான உ.உதயகாந்த் (JP) உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தாயகச் செயணியின் இணைப்பாளர் இருதயம் செல்வகுமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் முதலில் அன்னையின் சமாதியில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து அன்னையின் நினைவாக நிகழ்த்தப்பட்ட விளையாட்டு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்கள் மற்றும் சிறார்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அதிதிகளினால் அன்னை பூபதி தொடர்பான நினைவுரைகளும் இதன் போது நிகழ்த்தப்பட்டதுடன், அன்னையின் குடும்ப உறுப்பினர்களினால் தாகசாந்தி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

















Powered by Blogger.