மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளராக தயாநிதி மதன் அவர்கள் கடந்த (17)திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து, வெலிகந்தை பிரதேச செயலகத்தில் 2013 முதல் 2019 காலப்பகுதியிலும் மற்றும் கட்டடங்கள் திணைக்களம் 2019 முதல் 2026 வரையான காலப்பகுதியில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.
அக்கரைப்பற்று கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா கல்லூரியில் இ உயர்கல்வியை கற்று கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பட்டப்படிப்பை மேற்கொண்டதுடன் தற்போது முதுமாணி முகாமைத்துவ கற்கையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
