வேல்ஸ் விருது விழாவில் அந்தோனி திரைப்பட குழுவினருக்கு கௌரவம்!!

வேல்ஸ் விருது விழாவில் அந்தோனி திரைப்பட குழுவினருக்கு கௌரவம்!!

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறுபட்ட துறைகளில் பிரகாசிக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் இலங்கையில் உருவான முதல் திரைப்படமான அந்தோனி திரைப்படத்தின் பெயர் தாங்கிய அந்தோனி வேல்ஸ் விருது என்னும் பெயரில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் இயக்குனர் எஸ்.கிருஸ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளருமான "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் விசேடமாக அந்தோனி திரைப்படத்தின் திரைப்படக்குழுவினர் வருகைதந்ததுடன் வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு வகையிலான கலைத்துறையில் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிய 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதன்போ துபாராட்டி விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக இலங்கையில் மட்டுமன்றில் தென்னிந்திய சினிமாவில் தனக்கான தனிமுத்திரையினை பதித்துவரும் பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மின் மற்றும் சீதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்வில் வெற்றிவாகை சூடிய சபேசன் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அந்தோனி திரைப்படத்தின் திரைப்படக்குழுவினரும் இதன்போது ஏற்பாட்டுக்குழுவினரால் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் விசேடமாக இசைக்கலைஞர்களின் இசை நிகழ்வு மற்றும் சபேசனின் பாடல் என்பன இடம்பெற்றது.

இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் முதல் தடவையாக சரித்திரம் படைத்துள்ள அந்தோனி திரைப்படமானது, மலையாளம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே தடவையில் உலகம் பூராகவும் எதிர்வரும் மார்ச் 13 திகதி குறித்த திரைப்படம் வெளிவர இருக்கின்றது. 

தயாரிப்பாளர் ரமண தாஸ் அவர்களினால் ஓசை பிளிம்ஸ்  தயாரிப்பில் கே.சுகிர்தன் மற்றும் ஜேனோசன் ஆகிய இருவரது இயக்கத்தில் உருவான இலங்கையின் முழு நீள முதல் திரைப்படம் என வர்ணிக்கப்படுவதுடன், இசை ஞானி இளையராசா முதல் முதல் இலங்கை படத்திற்கு இசையமைத்த முதல் வரலாற்றுப் பதிவும் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















Powered by Blogger.