சிவஸ்ரீ சந்திரசேகரம் குருக்களுக்கு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கௌரம்!!


மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நீண்ட காலமாக பிரதம குருவாக சேவையாற்றிய சிவஸ்ரீ சந்திரசேகரம்  குருக்கள் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில்  இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டதுடன்  ஆலயத்திற்கும் களுதாவளைக் கிராமத்திற்கும் இதுவரை செய்த சேவையினைப் கௌரவித்து நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது 

சிவஸ்ரீ சந்திரசேகரம்  குருக்கள் 30 வருடங்களுக்கு முன்னர் 18 வருடங்களுக்கு மேலாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குருவாகப் பணியாற்றியதுடன் களுதாவளையின் ஆலயங்களுக்கான ஆலோசனைகளை இன்றுரை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.