மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் மற்றும் இளைஞர் கழகங்கள் இணைந்து நடாத்தும் சித்திரைப்புதுவருட கலாச்சார விளையாட்டு விழா- 2023!!


மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் மற்றும் இளைஞர் கழகங்கள் இணைந்து நடாத்தும் சித்திரைப்புதுவருட கலாச்சார விளையாட்டு விழா நாளை (2023.05.06) நடைபெறவுள்ளது.

நாளை பி.ப 2.00 மணிக்கு ஏசியன் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.நா.பிரியதர்சன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு.மா.தயாரபரன் (ஓய்வு நிலை வர்த்தக, வாணிப நுகர்வோர் விவகார அமைச்சு - பணிப்பாளர், கொழும்பு) மேலும் சிறப்பு அதிதிகள், விசேட அதிதிகள், அழைப்பு அதிதிகள் எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கலை, கலாச்சார விழுமியங்களை பறைசாற்றும் வகையில் பராம்பரிய கிராமிய விளையாட்டுகளையும் கண்டு மகிழ அழைத்து நிற்கின்றனர்.


(தகவல் : ஏசியன் விளையாட்டு கழகம்)

Powered by Blogger.