உலக நன்மைவேண்டி மாபெரும் ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி



உலக சிவனடியார்கள் கூட்டமைப்பும் , மஹா சித்தர்கள் ட்ரஸ்ட் மெய்யன்பர்களும் , ராவண சேனை அமைப்பினரும், களுதாவளை ஸ்ரீ1சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் இணைந்து வருகின்ற நவம்பர் மாதம் திருக்கார்த்திகை அன்று (நவம்பர்19,20,21,22) இலங்கை மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் உலக நன்மைக்காக நடைபெற போகின்ற மாபெரும் ஏகாதச  ருத்ர வேள்வியில் பார்த்திப லிங்க பூஜை என்னும் அபூர்வ பூஜையும் , ருத்ர ஜெபத்தின் மகிமைகள் பற்றியும் அன்பு நண்பர் சிவாகம ஆராய்ச்சியாளர் , அகம வித்வான் சிவஸ்ரீ.நித்ய சுதானந்த சர்மா  சிவபெருமானே பார்வதி தேவிக்கு சொன்ன சிவாகம ரகசியங்களை அவர்கள் விளக்கமாக கூறுகிறார்..... அவசியம்  கேளுங்கள்.......







ஏகாதச ருத்ர வேள்வி


***********************





உலகெங்கிலும் வாழும் உலக சிவனடியார் கூட்டமைப்பும் மஹா சித்தர்கள் ட்ரஸ்ட் அன்பர்களும் ராவண சேனை அமைப்பினரும் இணைந்து சித்தர்களின் குரல் அன்பர்கள் ஏற்பாட்டினால் , உலக ஷேமத்திற்காக , நாட்டில் தெய்வீக அருளாட்சி மலர , சிவனருள் செழிக்க , நவகோடி சித்தர்களின் அருளாசி வேண்டி , உலகில் வருங்காலத்தில் ஏற்படப்போகின்ற இயற்கை அனர்த்தங்கள் , நோய் தாக்கங்கள் என்பவற்றில் இருந்து மக்களை காக்க வேண்டி ஆதிமூல பரம்பொருளாம் அப்பன் ஆதி சிவனை வேண்டி இலங்கையில் ஆதி காலத்தில் இராவனேஸ்வரனால் நிகழ்த்தப்பட்டது போன்ற மாபெரும் ருத்ர பூஜையும் , ஏகாதச ருத்ர வேள்வியும் இலங்கையில் புராதன பிரசித்தி வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தான முன்றலில் வருகின்ற நவம்பர் 19,20,21,22 நடைபெற சிவனருள் கைகூடடியுள்ளது





இதுவரை உலகில் நடந்திராத அளவு இந்த மாபெரும் மஹா வேள்வியில் , உலகின் எல்லா திசைகளிலும் உள்ள பல்லாயிரம் சிவனடியார்கள் , சிதம்பரம் வழி வந்த தில்லைவாழ் அந்தணர்கள் , சிவாச்சாரியார்கள் , சிவ யோகிகள் , சித்தர்கள் , ஆன்மிக குருமார்கள் அனைவரும் வர இருக்கிறார்கள்.





இந்த மஹா வேள்வியை முன்னிட்டு சிவபூமியாக இலங்கை மீண்டும் மலர அனைத்து சிவனடியர்களாலும் தசகோடி (100கோடி) பஞ்சாட்சர ஜெபம் நடைபெற உள்ளது.





இந்த மஹா யாகத்தில் வருகின்ற அனைத்து மக்களுக்கும் உரிய சிவாகம முறைப்படி சிவதீக்சை எனும் சைவ தீக்சையும் ருத்ராக்ஸமும் அளிக்கப்பட இருக்கிறது.





முழுமையான 12 திருமுறை பாராயணம் உலக நன்மைக்காக நடைபெற உள்ளது.





இந்த மஹா வேள்வியில் இந்தியாவின் தலை சிறந்த சதுர்வேத பண்டிதர்களால் ருத்ர பராயணமும் சதுர்வேத பராயணமும் நடைபெற உள்ளது.





*இந்த மஹா வேள்வியில் அதி உன்னத சிறப்பாக உலகின் முதல்முறையாக தென்னிந்தியாவின் அபூர்வ சித்த வனங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ ஒரு லட்சம் காயகல்ப மூலிகைகளை கொண்டு , இறந்தவர்களை கூட பிழைக்கவைக்க கூடிய மந்திரம் என்று வேத நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ மஹா ம்ருகசஞ்சீவினி மிருத்யஞ்சய மந்திரத்தினால் ஒரு லட்சம் ஆகுதிகள் அளிக்கப்பட்டு , #ம்ருகசஞ்சீவினி #மஹா #மிருத்யஞ்சய #ஹோமம் நடைபெற உள்ளது.





இந்த மஹா ஹோமமானது வாழ்க்கையில் , வியாபாரத்தில் ஏற்படுகிற தடைகள் , திருமண தடை , குழந்தை பாக்கிய தடை , எதிரிகளால் ஏற்படுகின்ற தொல்லைகள் , தீராத நோய்கள் , அகால மரண கண்டங்கள் , ஜாதக தோஷங்கள் , எப்பேற்பட்ட வாழ்க்கையின் தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் நீக்கி நம்பியவர்களை காக்கும் அபூர்வ வேள்வி இது.





*இந்த வேள்விக்கு தேவையான ஆகுதி திரவியங்கள் , அபிஷேக பொருட்கள் , அன்னதான பொருட்கள் என்பவற்றை வழங்க கூடிய அன்பர்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும்.





கிரியா விபரம்


****************





19ம் திகதி நவம்பர் திங்கட்கிழமை


--------------------------------------------------------





காலை 5 மணிக்கு - கர்மாரம்பம்


காலை 6மணிக்கு - ஸ்ரீ வஞ்சா கல்ப ருத்ர கணபதி ஹோமம்.


மாலை 4 மணிக்கு- யாக சாலை பிரவேசம் , 1ம் கால ஏகாதசருத்ர யாகபூஜை , ருத்ர ஜெபம்





20ம் திகதி நவம்பர் செவ்வாய்கிழமை


-------------------------------------------------------------





காலை 7மணிக்கு - 2ம் கால ஏகாதசருத்ர யாகபூஜை , மரகத லிங்கத்துக்கு #ஆத்ம #லிங்க #பூஜை


மாலை 4மணிக்கு - 3ம் கால ஏகாதசி ருத்ர யாகபூஜை , மஹா ம்ருத்யஞ்சய ஜெப ஹோமம் (50,000 ஆவிர்த்தி)





21ம் திகதி நவம்பர் புதன்கிழமை


------------------------------------------------------





காலை 7மணிக்கு - 4ம் கால ஏகாதசருத்ர யாக பூஜை , அதி உத்தம #பார்த்திப #லிங்க #பூஜை


மாலை 4மணிக்கு - 5ம் கால ஏகாதச ருத்ர யாக பூஜை ,மஹா ம்ருத்யஞ்சய ஜெப ஹோமம் (50,000 ஆவிர்த்தி)





22ம் திகதி நவம்பர் வியாழக்கிழமை


-----------------------------------------------------------





அதிகாலை 4 மணிக்கு 6ம் கால ஏகாதச ருத்ர யாகபூஜை


காலை 6மணிக்கு dr.நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் #சிவபுராணம் பாடி ஏகாதச ருத்ர வேள்வியை தொடங்கி வைக்க மஹா வேள்வி ஆரம்பம் , மஹா லிங்கேஸ்வரருக்கு பிரமாண்டமான ருத்ராபிஷேகம்.


நண்பகல் 12 மணிக்கு #மஹா #பூர்ணாகுதி , ஆசியுரையுடன் யாகம் நிறைவு.





குருமார் விபரம்


******************





சித்தாதிசித்தர் , காகபுசுண்டர் பிரம்மரிஷி மலை தலையாட்டி சித்தர் ஸ்வாமிகளின் அருளாசியுடனும் ,





அன்னைசித்தர் , மூலிகை முனிவர் காகபுசுண்டர் ராஜ்குமார் ஸ்வாமிகளின் நல்ளாசியுடனும் ,





சிறப்பு குரு:-


*************





வாழும் மஹா சிவயோகி , 16கவர்ணகர் ,


திருக்குறள் இராம. கனகசுபுரத்தினம் ஐயா அவர்கள்.





*சர்வ போதகம்:-


*******************





வேதாகம ஞான பாஸ்கரன்


சிவஸ்ரீ.மகாதேவா குருக்கள்.


(தர்ம சாஸ்தா குருகுலம்-இணுவில்)





வேதாகம வித்யா பூசனம்


சிவஸ்ரீ. விஸ்வ நாராயண சர்மா (தெல்லிப்பளை)


(துர்கா குருகுல அதிபர்)





*வேள்வி தலைமை குரு:-


************************





சிவாகம சக்கரவர்த்தி , கிரியா கலாநிதி


சிவஸ்ரீ.சோமசுந்தர குருக்கள் (சித்தன்கேணி)





*வேள்வி ஒழுங்கமைப்பு:-


**************************





வேதாகம வித்யாபதி


சிவஸ்ரீ. குமார விக்னேஸ்வர குருக்கள்.





*அதிஉத்தம பார்த்திப லிங்க பூஜை குரு:-


**********************************************





சர்வ ஆகம சக்ரவர்த்திகள் , கிரியா விற்பனர்கள்


சிவஸ்ரீ. நித்யசுதானந்த சிவாச்சாரியார்.


சிவஸ்ரீ. சாம்பசிவ ஜெகதீஸ்வர சிவாச்சாரியார்.


சிவஸ்ரீ. சாம்பசிவ ஐயப்பதாஸ சிவாச்சாரியார்.





*சிறப்பு ஆசியுரை:-


*********************





கதிரமலை சிவன் தேவஸ்தான ஆதீன கர்த்தா


DR,சிவஸ்ரீ.சோமாஸ்கந்த குருக்கள்.





திருமலை பத்ரகாளி அம்மன் கோயில் ஆதீன கர்த்தா சிவஸ்ரீ.ரவிச்சந்திர குருக்கள்.





*சதுர் வேத ருத்ரபாராயணம்:-


*********************************





சதுர்வேத சாகரம் , மஹாவேத விற்பன்னர்


DR. மயிலாப்பூர் #ஸ்ரீனிவாச #சாஸ்திரிகள் மற்றும் அவர்தம் குழுவினர்.


( சென்னை , மயிலை சமஸ்க்ருத கல்லுரி அதிபர்)





*சிறப்பு கைலாய சிவபூதகண வாத்தியஇசை:-


**************************************************





அகில உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு ,


திருவாரூர் சிவனடியார் கூட்டம்.





*சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி:-


*************************************





அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி


ஈழநல்லூர் #பாலமுருகன் குழுவினர்





இளம் நாதஸ்வர இன்னிசை வேந்தர்கள்


சித்தார்த்தன், பிரதித்தன் சகோதர்கள். (சாவகச்சேரி)





*சிறப்பு சாமகான இசைகச்சேரி:-


***********************************





தென்னிந்திய கர்நாடக முன்னணி இசைபாடகி கானவினோதினி DR.#நித்யஸ்ரீ #மகாதேவன் அவர்கள்.





குறிப்பு:-


**********





இந்த மஹா ஏகாதச ருத்ர வேள்வியை முன்னிட்டு நான்கு நாட்களும் இரவு பகலாக ஆறு சுவையுடன் கூடிய மாபெரும் அன்னதான இறைபணி நடைபெறும்.





உலகெங்கிலும் வாழும் அனைத்து சிவ பக்தர்களையும் அழைக்கிறோம்....





(இந்த மஹா வேள்விக்கு பெருமளவில் யாகத்திற்கான யாக கட்டைகள் , மூலிகை பொருட்கள் , நெய், தேன் , நவதானியங்கள் , பழங்கள் , ஆகுதி பொருட்கள் , பூர்ணாகுதி வஸ்திரங்கள் என்பன தேவை படுகின்றன. வாங்கி கொடுக்க கூடியவர்கள் ஆலய நிர்வாக சபையை தொடர்பு கொள்ளவும்.)





*ஒம் சிவ சிவ ஓம்*


Powered by Blogger.