வாகரையில் விசேட தேவையுடைய 30 குடும்பங்களுக்கு கிணறு - லண்டனில் இருந்து வந்து உதவும் நல்லுள்ளங்கள்!!

கோவில் போரதீவை சேர்ந்த லண்டனில் தொழிலதிபர் ஆன மார்க்கண்டு நேசராசா மற்றும் மார்க்கண்டு லிங்கராசா குடும்ப உறவுகளின் நிதி பங்களிப்புடன் அமரத்துவம் அடைந்த மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி நினைவாக மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேசத்தில் விசேட தேவை உடைய 30 குடும்பங்களுக்கு சுமார் முப்பதுலட்சம் பெறுமதியான குடிநீர் கிணறுகளுக்கான அடிக்கல் நேற்று (05) திகதி நாட்டப்பட்டது.

தகட்டு பறல்கள் மூலமாக குடிநீரை பெற்று வந்த மக்களின் அவல நிலை அறிந்து சுத்தமான குடிநீரை வழங்கி வைக்கும் நோக்கில் இவர்களினால் மேற்படி விடயம் செய்து கொடுக்கப்படவுள்ளதுடன் அதன் ஆரம்பகட்டப் பணிகள்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.













Powered by Blogger.