விடுமுறைகால செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸ் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக ஊடக தளங்களில் ஏப்ரல் பண்டிகை காலத்தின் போது, அவர்களின் பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விபரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, சமூக ஊடகங்களில் வெளியில் இருக்கும் இடங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் தங்கள் சிசிடிவி கேமராக்களை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் எஸ்எஸ்பி தல்துவா கேட்டுக் கொண்டார்.