மட்டக்களப்பு வாவியில் இரண்டு சடலங்கள்!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் சின்ன உப்போடை வாவியில் உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (07) திகதி பி.ப 4.00 மணியளவில் மட்டக்களப்பு வாவியின் சின்ன உப்போடை வாவியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளதாகவும் சடலத்தை இதுவரை அடையாளம் காணவில்லையெனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


Powered by Blogger.