உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் 134 ஆவது ஜனன தின நிகழ்வு!!

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் 134 ஆவது ஜனன தினம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள சுவாமியின் கருங்கற்சிலை பீட வளாகத்தில் இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் துணை முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீசானந்தா ஜீ மகராஜ், மட்டக்களப்பு மாநகர நகரபிதா சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார். முன்னாள் நகரபிதா தியாகராஜா சரவணபவன், உறுப்பினர் கே.பிரேமானந்தன், வர்த்தகர் சங்கத் தலைவர் தேசபந்து மு.செல்வராஜா, தேசிய கல்வி நிறுவக தமிழ்ப்பாட பணிப்பாளர் முருகு தயாநிதி, ஹரி சிறுவர் இல்ல ஸ்தாபகத் தலைவர் எம்.சந்திரகுமார், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி, விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை செயலாளர் எஸ்.ஜெயராஜ், உறுப்பினர்கள். அதிபர்கள். மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுவாமி உமாதீசானந்தாஜி மகராஜ் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பூசை வழிபாடுகளை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டோர் மலரஞ்சலி செலுத்தினர், இவ் ஜனனதின நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் பற்றி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

கல்லடிப் பாலத்தின் அருகில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மாமல்லபுர சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட கருங்கல் சிலையானது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விபுலானந்த அடிகளாரது பக்தர்களின் நிதிப் பங்களிப்புடன்  சிலை  அமைப்பு செயற்குழுவின்  தலைவரான    மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவருமாகிய  தேசபந்து  முத்துக்குமார் செல்வராஜா  அவர்களது  பாரிய முயற்சியினால் குறித்த 15 அடி  உயரமான சுவாமியின் கருங்கற்சிலை உலகின் முதலாவது கருங்கற்சிலை என்பதும் குறிப்பிட்ட தக்கதாகும் .











Powered by Blogger.