எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் QR முறைக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 15 லீற்றர் வீதம் 22 லீற்றராக அதிகரிக்கப்படும். பதிவு செய்யப்படாத ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான 08 லீற்றர் என்ற எல்லை 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றர்கள், கார்களுக்கு வாரத்திற்கு 40 லீற்றர்கள் ஒதுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.