கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோதல்


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிலர் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.நோயாளியை பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு வந்த நபர்களை தடுத்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


இதன்போது வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Powered by Blogger.