மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அதே வேளை அரசாங்கத்தினால் நிரந்தர பாலத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.













Powered by Blogger.