வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூச்சி சமாதானப் பூங்காவின் மாபெரும் மாயச்சித்திரக் கண்காட்சி!!

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூச்சி சமாதானப் பூங்காவின் மாபெரும் மாயச்சித்திரக் கண்காட்சியானது இல : 37, பயனியர் வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 2026 மே மாதம் 3ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை தினமும் காலை 09.00 முதல் மாலை  மணி முதல் மாலை 07.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

எமது பிரதேசத்திலுள்ள பல்வேறு தரப்பினரால் அவர்களது உளவியல் பிரதிபலிப்புக்களாக வரையப்பட்ட மாயச் சித்திரங்களுடன் உளம் மகிழும் சித்திரங்கள், கலை வடிவான சித்திரங்கள், வீடுகளை அலங்கரிக்கும் சித்திரங்கள், கைவேலை அலங்காரப் பொருட்கள், சிறுவர்களுக்கான முக நிறந்தீட்டல், உளவியல் குணப்படுத்தும் சித்திரங்கள் போன்ற பல்வேறுபட்ட சித்திரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 3ம் திகதி (03.05.2026) ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி. புளோரன்ஸ் பாரதி கென்னடி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர்  நா.தனஞ்சயன்  ஆகியோரின் பிரசன்னத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்த உளவியல் குணப்படுத்தல் மாயச் சித்திரக் கண்காட்சியை அனைவரும் வருகைதந்து பார்வையிடுவதுடன், உங்களது பிள்ளைகள் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூச்சி சமாதானப் பூங்காவுடன் இணைந்து அவர்கள் தங்களை வளப்படுத்த சந்தர்ப்பம் வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூச்சி சமாதானப் பூங்காவினர். 


Powered by Blogger.