மட்டக்களப்பில் மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயது தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்திற்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் தண்டபணம் செலுத்துமாறும்.

அவ்வாறு 3 குற்றத்துக்கும் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை 30 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21 ஆம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில்; வழக்கு தொடரப்பட்டு இடம்பெற்று வந்த பின்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு 2017 ஜூலை 12ம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

தண்டனை சட்டக்கோவை 308 ஆ இரண்டாம் பிரிவின் கீழ் 16 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குறித்த தாயார் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்காக கடந்த 25 ம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்ற போது குற்றவாளிக்கு முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாவை அபராதமும் செலுத்துமாறும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை நஷ்ட ஈடாக செலுத்துமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்து தீர்ப்பளித்தார்.



Powered by Blogger.