வெளியாகியது மண்வாசனையினை சுமந்துவரும் "மழைக்கால இரவுகள்" - எம்மவரின் படைப்பிற்கு சர்வதேச அங்கீகாரம்!!
OSAI - Films இன் சுகந்தினி ரமணதாஸ் வழங்கும் மண்வாசனையினை சுமந்துவரும் "மழைக்கால இரவுகள்" குறுந் திரைப்படம் இன்று (25) திகதி மாலை 6 மணியளவில் ஓரங்கம் YouTube தளத்தில் வெளியாகியுள்ளது.
சர்வதேச மேடைகளில் பல விருதுகளை வென்ற குறுந்திரைப்படமான "மழைக்கால இரவுகள்" 20 நிமிட குறுந்திரைப்படமானது பல ரசிகர்களது எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
எம் மண்ணின் படைப்பான இத்திரைப்படமானது ஓரங்கம் YouTube தளத்தில் வெளியாகியதும், மேலும் அனைவர் மத்தியிலும் இருந்து ஆதரவு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஓரங்கம் மற்றும் ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர்களான கலைவளரி இராமணதாஸ் மற்றும் சுகந்தனி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் சுகிர்தன்.சீ யின் இயக்கத்தில், ஜெயந்தன் விக்கியின் இசையமைப்பில் அலெக்ஸ் கோபியின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் இணை இயக்குனர்களான கலை - கலா மோகன் - தெய்விந்திரன் ரிஷிந்தன், அபிசன் ஆகியோரின் இணை இயக்கத்தில், ஒப்பனையாளராக வாணி, விளம்பர வடிவமைப்பாளர்களாக மது ஸ்டாலின் மற்றும் துசிகரன், தயாரிப்பு நிர்வாகம் டர்வின் மற்றும் மிருணன் மற்றும் பூவரசி மீடியா ஆகியோரும் இணைந்து செயற்பட்ட இத் திரைப்படத்தில் நடிகர்களாக ஜொனி அன்ரன், யாழரசி கிறிஸ்துராஜா, அம்பிகை ஜிவேஸ்வரன், யசிந்தா, மணி, சுகி அஜன் மாஸ், நித்திஸ், சுவைக்கின் கிறிஸ்துராஜா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதுடன், இக் குறுந் திரைப்படமானது சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/mDJbWXNQRkc?si=czaoV8vsy6aOa7PY











