முக்கிய மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கம்!!


வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அவர்கள் பதவி நீக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹாம்பத்தும் வடமேல் மாகாண ஆளுநராக அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.